• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி ஹீரோவா அல்லது ஜீரோவா என்று மக்கள் முடிவு செய்வார்கள் – ஜெயக்குமார்

November 13, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவா அல்லது ஜீரோவா என்று மக்கள் முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில் நெருஞ்சி முள் போன்றது.7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நேற்றே ரஜினி கூறியிருக்க வேண்டும்.தற்போது காலந்தாழ்த்தி பதிலளித்துள்ளார்.அவர் சினிமாவில் வேண்டுமென்றால் பெரிய ஹீரோவாக இருக்கலாம்.ஆனால்,அரசியலில் அவர் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் இதிலிருந்து முடிவெடுத்துக்கொள்வார்கள்.

எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க மத்தியில் ஆட்சி நடத்துகிறது.அண்ணா கூறுவதுபோல மத்தியில் கூட்டாச்சி,மாநிலத்தில் சுயாட்சி.எனவே,எங்கள் சுயாட்சியை நாங்கள் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.அந்த அடிப்படையில் தான் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் பெரும் நோக்கில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கிறார் எனக் கூறினார்.

மேலும் படிக்க