• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரொம்ப அழுதேன் , நிறைய சிரிச்சேன் அருவி படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு

December 23, 2017 தண்டோரா குழு

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அருவி. இப்படம் ரசிகர்கள் மட்டுன்றி திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைப்பேசியில் அழைத்து ஏற்கனவே பாராட்டியிருந்தார். இந்நிலையில், ரஜினி படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார்.

அப்போது, அருவி படத்தின் தயாரிப்பாளர் S.R.பிரபுவையும் வாழ்த்திய ரஜினிகாந்த் நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார்.

அருவி ரொம்ப Brilliant ஆன படம் , ரொம்ப Excellent ஆன படம் , ரொம்ப அழுதேன் , நிறைய சிரிச்சேன். நான் தனியாக படத்தை பார்க்கும் போது தியேட்டர்-ல உட்கார்ந்து பார்த்த ஒரு பீல் கிடைச்சுது என இயக்குநர் அருண்பிரபுவிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

அதைப்போல்,அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வார்த்தையான “ Rolling sir “ என்ற வார்த்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார்.

அருவி திரைப்படத்தின் நாயகி அதீதியிடம் :- உங்க Performance super… எவ்வளவு weight loss பண்ணிங்க என்று கேட்டு பாராட்டியுள்ளார். இறுதியில் உங்களை போன்ற ஆட்கள் கண்டிப்பாக ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்க என்று கூறி வாழ்த்தியுள்ளார்.மேலும், சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார்.

மேலும் படிக்க