• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு

December 2, 2016 தண்டோரா குழு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகிய நடா புயல் மக்களுக்கு அச்சத்தை அளித்தது. ஆனால், அது வலுவிழந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) அதிகாலையில் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது.

இதையடுத்து, மீண்டும் அந்தமானுக்குத் தெற்குப் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், காற்று அதிகமாக வீசும்.

மேலும், கடல் அதிக சீற்றத்தோடு காணப்படும். அதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம்.புதிதாக உருவாக இருக்கும் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க