• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பிக்கு 5 ஆண்டு சிறை. ரயில்வே துறை அதிரடி உத்தரவு

August 6, 2016 தண்டோரா குழு

ரயிலின் முன்பு செல்பி எடுக்கும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் செல்பியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் பாதி இந்தியாவில்தான் உள்ளது. குறிப்பாக ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்கும்போது எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் எடுப்பதே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரயிலில் செல்லும்போது, ரயில் நிலையங்களில் செல்பி எடுத்து அதே ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என நினைத்து செல்பி எடுப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலின் முன் செல்பி எடுப்பவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 142 (தொந்தரவு செய்தல்), 147 (பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறல்) மற்றும் 153 (பயணிகளுக்கு அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.குறிப்பாக 153வது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப் படுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க