• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் கட்சி தலைவரானார் ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

December 11, 2017 தண்டோரா குழு

அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
132 ஆண்டு கால வரலாற்றுடன் இந்தியாவின் பழமையான கட்சியாக திகழும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார்.

தற்போது அவரது உடல்நிலையில் பாதிப்பு உள்ளதால் ராகுல் காந்தியை தலைவராக்கும் முயற்சிகள் நடைபெற்றன.இதையடுத்து முறைப்படி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். மேலும், பல மாநிலங்களைச் சேர்ந்த 89 பேரும் ராகுல் காந்திக்காக மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ராகுலை எதிர்த்து எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

இதனால் போட்டி மனுவை திரும்ப பெற அறிவிக்கப்பட்டுள்ள கடைசி நாளான இன்று, அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருமனதாக ராகுல் காந்தி போட்டியே இல்லாமல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைவர் சோனியா காந்தி, வரும் 16-ம் தேதி மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான சான்றிதழை ராகுலிடம் முறைப்படி வழங்வுள்ளார்.நேரு குடும்பத்திலிருந்து 6வது நபராக தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க