October 2, 2018
தண்டோரா குழு
சாக்கடையை தூர்வாரிய புதுவை முதல்வர் நாராயணசாமியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
புதுவை மாநில முதல்வர் நாராயணசாமியின் சொந்த தொகுதி நெல்லித்தோப்பு.இதையடுத்து,இன்று காலை சொந்த தொகுதியான நெல்லித்தோப்பில் நாராயணசாமி இன்று தூய்மை பணியை மேற்கொண்டார்.அப்போது,நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகேயுள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கவனித்த முதல்வர் நாராயணசாமி,வாய்க்காலில் இறங்கி குப்பைகளை அகற்றி தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றினார்.அவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
இந்நிலையில்,புதுவை முதல்வர் நாராயணசாமியை பாராட்டி உங்களது இந்த செயல் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.