• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

PSG செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தடயவியல் செவிலியர் தேசிய மாநாடு (FNC 2026)

February 12, 2026 தண்டோரா குழு

PSG செவிலியர் கல்லூரியால், பிப்ரவரி 12 மற்றும் 13, 2026 ஆகிய தேதிகளில் PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் “புதுமை, ஒத்துழைப்பு மற்றும் முழுமையான பராமரிப்பு: தடயவியல் செவிலியர் – இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சட்ட அமைப்புக்கான எதிர்கால அணுகுமுறை (FNC 2026)” என்ற தலைப்பில் தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரண்டு நாள் மாநாடு,இந்தியா முழுவதும் இருந்து செவிலியர் வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஒரே மேடையில் இணைத்த ஒரு முக்கிய கல்வி தளமாக அமைந்தது.

மாநாட்டிற்கு முன்னதாக பிப்ரவரி 12 அன்று PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடயவியல் மருத்துவ ஆய்வகத்தில் “தடயவியல் செவிலியர்களுக்கான திறன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.இதில் சாட்சிய சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு, மருத்துவ-சட்ட வழக்குகளில் அடையாளம் காணல், ஆவணப்படுத்தல்,பாலியல் வன்கொடுமை பரிசோதனை, விஷவியல் நடைமுறைகள் மற்றும் உயிர் பிழைத்தோருக்கான ஆலோசனை போன்ற துறைகளில் நடைமுறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த அமர்வுகளில் டாக்டர்.ஜெகதீஸ்வரராஜ் டாக்டர்.ஜெயதீபா.ஆர்.,டாக்டர் தீப்தி சுக்லா, டாக்டர் ஜெகன்,டாக்டர் வீணா, டாக்டர் எஸ். சங்கர், டாக்டர் ஆர்.கோபிநாத் மற்றும் பேராசிரியர் மீரா, உள்ளிட்ட நிபுணர்கள் பயிற்சி வழங்கினர்.

தேசிய மாநாடு

தேசிய மாநாட்டை PSG செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயதீபா தொடங்கி வைத்தார்.தடயவியல் செவிலியர் துறையில் உருவாகி வரும் புதிய போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆராய்வதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

முக்கிய அமர்வுகளில் டாக்டர் தீப்தி சுக்லா, டாக்டர் ரஞ்சீத் குமார் சிங்,டாக்டர் மனோகரன்,வழக்கறிஞர் ஆஷா உன்னிதன் மற்றும் டாக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சமகால சவால்கள் மற்றும் புதுமைகள் குறித்து உரையாற்றினர்.

“மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தாமதமான நீதிக்கு வழிவகுக்கும் சான்றுகள் சேகரிப்பில் உள்ள நெறிமுறை சிக்கல்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற குழு விவாதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.வி. ராஜ் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

முதல்வர் டாக்டர் ஜெயதீபா தனது உரையில், “தடயவியல் செவிலியர் துறை இனி ஒரு சிறப்புப் பிரிவு அல்ல; அது சுகாதாரப் பராமரிப்புக்கும் நீதிக்கும் இடையிலான முக்கியமான பாலமாகும்,” என்று குறிப்பிட்டார்.

டாக்டர் ஜெகதீஸ்வரராஜ் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.டாக்டர் ராகேஷ் கோரியா திறன் மேம்பாடு காலத்தின் தேவையெனத் தெரிவித்தார்.
நிறைவு விழாவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

800க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வு, தடயவியல் செவிலியர் துறையின் வளர்ச்சிக்கான முக்கியமான படியாக அமைந்து, FNC 2026 வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

மேலும் படிக்க