• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய ரூபாய் நோட்டில் நேதாஜி உள்ளிட்டோரின் படங்களையும் அச்சிட வேண்டும் – அர்ஜுன் சம்பத்

November 9, 2016 தண்டோரா குழு

வெளியிடப்பட உள்ள புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி மட்டுமல்லாமல் நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட முக்கிய தேசத் தலைவர்களின் படங்களையும் அச்சிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதை இந்து மக்கள் கட்சியினர் வரவேற்று கோவையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்தியா முழுவதும் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார், இதற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரவேற்றனர்.

மேலும், இது குறித்துப் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், “பிரதமர் மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் நாட்டின் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணம் வெளியே வரும், பணப்பதுக்கல் குறையும். இரண்டு நாள் பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டால், பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

வெளியிடப்பட உள்ள புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி மட்டுமல்லாமல் நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட முக்கிய தேசத் தலைவர்களின் படங்களையும் அச்சிட வேண்டும் எனவும் பணத்தின் வடிவமாக இருக்ககூடிய லட்சுமி, கணபதியின் படங்கள் இடம் பெறவேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க