• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்களில் குற்றச்சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – சைலேந்திரபாபு

January 12, 2018 தண்டோரா குழு

கோவை நேரு கல்லூரியில் ஏர் ரைபிள் அகாடமியை, தமிழக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு இன்று(ஜன 12) துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு,

“ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அதிக தங்கங்கள் கிடைத்து வருவதாகவும், இதுபோன்ற அகாடமிகள் சிறந்த வீரர்களை உருவாக்கும் எனவும் தெரிவித்தார். ரயில்வே போலீசாரின் சோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.

ரயில்வே குற்றங்களில் தொடர்புடைய வட மாநில குற்றவாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் பயணங்களில் அண்டை மாநிலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், தமிழகத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மேலும் ரயில்வே குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பு பாதை காவல்துறையில் போதுமான காவலர்கள் உள்ளனர்.புலன் விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது”.

மேலும் படிக்க