• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?”மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

December 18, 2017 தண்டோரா குழு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி முகம் கொண்டுள்ளது.இந்நிலையில்,நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத், ஹிமாச்சல்பிரதேஷ் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக குஜராத்திலும் ஹிமாச்சல் பிரதேஷத்திலும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாத்தில் உள்ளனர்.

இந்நிலையில், குஜராத் தேர்தல் வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

எனது பாசமிகு பிரதமருக்கு வாழ்த்துகள்…

நீங்கள் உங்கள் வளர்ச்சி அரசியலால் இத்தேர்தலில் அமோக வெற்றியல்லவா பெற்றிருக்க வேண்டும். 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று???இப்போதாவது நீங்கள் சில உண்மைகளை உணர நேரம் ஒதுக்குவீர்களா?

a) பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை என்பதை உணர்வீர்களா?

b) பாகிஸ்தான்.. மதம்.. சாதி.. என சமூகத்தை அச்சுறுத்தும் சில அடிப்படைவாதிகள் ஆதரிக்கும் இத்தகைய கொள்கைகளைத் தாண்டியும் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன என்பதை உணர்வீர்களா?

c) கிராமப்புறங்களில்தான் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்வீர்களா?

விவசாயிகள்… ஏழைகள்.. கிராமவாசிகளின் புறக்கணிக்கப்பட்ட குரல் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.

அது உங்களுக்கு கேட்கிறதா..?சும்மாத்தான் கேட்கிறேன் #justasking எனப் பதிவிட்டுள்ளார்.ஏற்கனவே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பாஜக மீது கடும் விமர்சனங்களை வைத்தவர் பிரகாஷ் ராஜ். தன்னுடன் ஒப்பிடும்போது பிதமர் மோடியே சிறந்த நடிகர் என்ற கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க