June 5, 2018
தண்டோரா குழு
பெட்ரோல் டீசல் விலை 9 பைசா குறைக்கப்பட்டதை கேலி செய்யும் வகையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமரின் நிவாரண நிதிக்கு 9 பைசாவை காசோலை வழங்கியுள்ளார்.
கடந்த 16 நாட்களாகவே வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தைத் தொட்டு வந்தது. எனினும், மே 30ஆம் தேதி முதல் தொடர்ந்து 7வது நாட்களாக விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பெட்ரோல் டீசல் விலை இன்று 9 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் சிர்சில்லா மாவட்டத்தைச் சேரந்த சந்திரய்யா என்பவர் இந்த விலை குறைப்பை விநோதமாக கிண்டல் செய்திருக்கிறார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 9 பைசாவுக்கான காசோலையை நன்கொடையாக வழங்கியுள்ள அவர் “நீங்கள் பெட்ரோல், டீசல் விலையை 9 பைசா குறைத்தீர்கள். அதனால் நான் சேமித்ததை அந்த தொகையை உங்களுக்கு நன்கொடை அளித்திருக்கிறேன். நான் கொடுத்த தொகையை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.