• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு !

October 31, 2018 தண்டோரா குழு

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல்.இவர் நாடு விடுதலை அடைந்தபோது 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினார்.இதனால் இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.இதைக்குறிப்பிடும் வகையில் ஒற்றுமை சிலை என்ற பெயரில் படேலுக்கு குஜராத்தின் ஜாம்நகரர் மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற தீவில் உலகிலேயே மிக உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலைக்கு கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 23ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இதைத்தொடர்ந்து எல் அண்டு டி நிறுவனம் 182 மீட்டர் உயரச் சிலையை 33 மாதங்களில் 3 ஆயிரம் கோடிசெலவில் உருவாக்கியது.

இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட்,ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.இந்த சிலை 6.5 ரிக்டர் அளவு நில அதிர்வையும்,180 கி.மீ.வேக புயலையும் தாங்கி நிற்கக்கூடியது என்ற கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்,படேலின் 143வது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை இன்று திறந்து வைத்தார்.இதன் மூலம் இனி உலகில் உயரமான சிலை பட்டேலின் சிலையாக தான் இருக்கும்.சீனாவில் உள்ள புத்தர் சிலை 2-ம் இடத்திலும் போதிதர்மர் சிலை 3-ம் இடத்திலும் உள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை 4-ம் இடத்திலும்,ரஷ்யாவில் உள்ள ‘தி மதர்லேண்ட் கால்ஸ்’ சிலை 5-ம் இடத்திலும்,பிரேசிலில் உள்ள மீட்பர் இயேசு சிலை, 6-ம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க