December 12, 2017
தண்டோரா குழு
பிரதமர் மோடி நிலத்திலும், கடலிலும் இறங்கும் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்ய உள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் இன்று பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாததை அடுத்து, இன்று கடல் விமானத்தில் பயணம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
அனைத்து இடங்களிலும் விமான நிலையங்கள் கட்ட முடியாது.இதனால் மத்திய அரசு நீர்வழி பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறது.இதனால் கடல் விமானம் மூலமாக அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் இருந்து தரோய் அணைக்கு பயணம் செய்ய உள்ளேன்.பிறகு தரோய் அணை அருகே உள்ள அம்பாஜி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.