July 27, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாகவே,உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறார்.
இந்நிலையில் அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் சென்று,கருணாநிதி குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின்,கனிமொழியிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்.கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் கூறியுள்ளார்.