• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாய் விமான விபத்தில் உயிர் தப்பிய கேரளா நபருக்கு லாட்டரியில் 6 கோடி ரூபாய் பரிசு

August 12, 2016 தண்டோரா குழு

சமீபத்தில் நடந்த துபாய் விமான தீ விபத்தில் உயிர் தப்பியவருக்கு, ஆறு நாட்களுக்கு பிறகு சுமார் ஆறு கோடி ரூபாய் லாட்டரிச் சீட்டில் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற EK521 என்ற எமிரேட்ஸ் விமானம், துபாயில் தரை இறங்கிய போது விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. அந்த விமான நிலைய பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அதிலிருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த இந்தியாவின் தென் மேற்கு மாநிலமான கேரளாவை சேர்ந்த காதர்(62) என்பவர், உயிர் பிழைத்த ஆச்சர்யத்திலிருந்தே மீளாத நிலையில், அடுத்த ஆறு நாட்களில் மற்றொரு ஆச்சரியமான செய்தி அவரை மேலும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துபாயில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் கடந்த 37 வருடங்களாகப் பணியாற்றி வந்த காதர், தனது சொந்த ஊரான கேரளாவுக்கு செல்லும் போது, விமான நிலையத்தில் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு கேரளா சென்ற அவர், அப்போது ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். லாட்டரி முடிவில் கவனம் செலுத்தாமல் மீண்டும் துபாய் திரும்பிய போது தான் விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்.

இந்நிலையில் விபத்து நடந்த சுமார் ஆறு நாட்கள் கழித்து, காதர் வாங்கிய லாட்டரிச் சீட்டின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இன்ப அதிர்ச்சியாகக் காதர் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. இதன் பரிசுத்தொகை இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 68 லட்சமாகும்.

இந்த வருட இறுதியில் தனது பணியில் இருந்து ஓய்வுபெறப்போகும் அவர், இந்த பணத்தை கொண்டு கேரளாவில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு உதவப்போவதாகத் தெரிவித்துள்ளார்.இதைக்குறித்து அவர் பேசுகையில், அன்று நடந்த விமான விபத்தில் நான் உயிர் தப்பித்ததே கடவுள் எனக்குக் கொடுத்த இரண்டாவது வாழ்க்கை.

இந்நிலையில் வாழ்க்கையோடு சேர்த்து பெருமளவில் பணத்தையும் எனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இதைக் கொண்டு நல்ல விஷயங்களைச் செய்வேன் என்று காதர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க