• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருட்டு விசிடி விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு

September 27, 2016 தண்டோரா குழு

திருட்டு விசிடி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி விஜய் நற்பணி இயக்கத்தினர் கோவை மாநகர காவல் ஆனையரிடம் புகார் மனு அளித்தனர்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த தொடரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகிய ஆண்டவன் கட்டளை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்யபட்டு திருட்டு விசிடிகள் தயாரிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதிச்சேரி கடைகளில் அமோகமாக இந்த திருட்டு விசிடிகள் விற்கபட்டு வருவதால் பலகோடி ரூபாய் செலவழித்து எடுக்கபடும் திரைப்பட தொழில் நசிந்து வருவதாக விஜய் நற்பணி இயக்கதினர் தெரிவித்தனர். மேலும் பொதுநலன் கருதி சைபர் கிரைம் போலீஸார் உரிய விசாரனை நடத்தி துரித நடவடிக்கை எடுப்பதன் மூலம் திருட்டு விசிடி விற்பனையை தடுத்து நிறுத்த முடியும் எனக்கோரி நடிகர் விஜய் நற்பணி இயக்கத்தினர் கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில் 20கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆனையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்க