January 23, 2018
தண்டோரா குழு
தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுகவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கடந்த 16 ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்பட்டது.வளர்மதிக்கு தமிழக அரசு பெரியார் விருது வழங்கப்பட்டதிலிருந்தே அரசியல் தளத்தில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.