• Download mobile app
06 Oct 2026, TuesdayEdition - 3891
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – விஜயகாந்த்

September 12, 2018 தண்டோரா குழு

பேரறிவாளன் உட்பட 7பேரையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள்,ஆளுநர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.ஆனாலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு,பல ஆண்டுகாலமாக சிறைதண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல்,அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்ததை கருத்தில் கொண்டு மத்திய அரசும்,மாநில அரசும்,ஆளுநரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக எழுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க