November 14, 2017
தண்டோரா குழு
பொங்கலுக்குள் தனது மகன் விடுதலை ஆவார். வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை சந்தித்த பிறகு தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் இன்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜனின் பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு எம்.டி.எம்.ஏ-வுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.2 பேட்டரி வாங்கி கொடுத்தது எனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை பதிவு செய்ய மறந்து விட்டதாகவும் அது தொடர்பாக மொழிபெயர்ப்பு செய்யும் போது அது பல அர்த்தங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் இதனால் பேரறிவாளனுக்கு மிக பெரிய தண்டனை கிடைத்துவிட்டதாகவும் விசாரனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது இதுவே எனது மகனுக்கு பாதி விடுதலை கிடைத்தது போல் உள்ளது என்றும் எனவே எனது மகன் வரும் பொங்கலுக்குள் விடுதலை ஆவார் பொங்களை அவருடன் கொண்டாடுவேன் என்றும் அற்புதம்மாள் நம்மிக்கை தெரிவித்தார்.
மேலும் சிறையில் உள்ள பேரறிவாளனும் நான் விரைவில் விடுதலை ஆவேன் என தெரிவித்திருப்பதாகவும் பேரறிவாளனுக்கு சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு வேலூர் அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் அற்புதம்மாள் கூறினார்.