• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – அமீர் கான்

December 17, 2016 தண்டோரா குழு

மத்திய அரசு எடுத்துள்ள ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நல்ல முயற்சி, நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என பாலிவூட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நவம்பர் 8 ம் தேதி பழைய ரூபாய் 500,1000 தடை செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார் . இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், வரவேற்பும் வந்துக்கொண்டிருக்கிறது.
மோடியின் இந்த முயற்சிக்கு நடிகர் அமீர் கான் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகர் அமீர் கான் பேசியதாவது;

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைகளால் நான் எந்தப் பிரச்சனைகளையும் சந்திக்கவில்லை. நான் முறையாக வரி கட்டுபவன். ஏதாவது வாங்கவேண்டும் என்றால் டெபிட் கார்டையோ அல்லது கிரெடிட் கார்டையோதான் பயன்படுத்துகிறேன். அதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

யாரிடமெல்லாம் கறுப்புப் பணம் உள்ளதோ, அவர்களே பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி நல்ல நடவடிக்கையை எடுத்துள்ளார். அவரின் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நான் பொருளாதார நிபுணர் அல்ல. யாராவது ஒரு நல்ல தொடக்கத்தை முன்னெடுத்தால், அவர்களுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். அதே நேரம் சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க