• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளையனாக மாறிய அடகுக் கடை உரிமையாளர்

September 9, 2016 தண்டோரா குழு

சென்னையில் நடைபெற்ற பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்ட அடகுக்கடை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது.

சென்னையில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வந்தது. இதையடுத்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் சென்னை அசோக் நகருக்கு புதிய ஆணையராக பொறுப்பேற்ற அரிக்குமார், அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் கேமரா பொறுத்த குடியிருப்பு நலச்சங்கம், வியாபாரிகள் ஆகியோரை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கே.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், அசோக்நகர் ஆகிய இடங்களில் 120க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீவித்யா என்ற ஆசிரியையின் நகையைப் பறித்த இரண்டு வாலிபர் உருவம் அந்த கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதனையடுத்து உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் இந்த செயின் பறிப்பு கும்பலுக்கு மூளையாக ஆயிரம் விளக்கு பகுதியில் அடகு கடை வைத்திருக்கும் கிஷோர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கிஷோரின் துண்டுதல் பேரில் தமின் அன்சாரி, அர்ஜீன் ஆகிய இரண்டு பேர் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் நகையைப் பறிப்பில் ஈடுபட்டனர் என்பது கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 36 சவரன் நகையைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து கூறிய காவல்துறையினர் நகை அடக்குக் கடையை ஆதாரமாக வைத்துக் கொள்ளையடித்த நகைகளை எளிதாக விற்பனை செய்துள்ளார் கிஷோர் எனத் தெரிவித்தனர். மேலும் இவர்களது குழுவில் இருவர் மட்டும்தான் இருந்தார்களா அல்லது மேலும் பலர் இருக்கிறார்களா என விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க