• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகநூலில் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிறுவயது படத்தை வெளியிட்ட பெற்றோர் மீது மகள் வழக்கு

September 19, 2016 தண்டோரா குழு

சங்கடப் படவைக்கும் சிறு பிராயத்துப் புகைப் படத்தை முகநூலில் வெளியிட்ட பெற்றோர் மீது 18 வயது பெண் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

ஆஸ்டிரியா நாட்டுப் பெண் ஒருவர் தனது பெற்றோர் தனது வாழ்க்கையையே துயர் மிகுந்ததாக ஆக்கிவிட்டனர் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

சிறுவயதில் சில வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள்,பிற்காலத்தில் அவர்களுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும்.பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் பதிவாக்கி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவர்.

அவர்கள் சிறிய வயதாக இருக்கும் போது குழந்தைகள் அதைப்பொருட்படுத்துவதில்லை.ஆனால் அவர்களே பெரியவர்கள் ஆகி அவைகளை பார்க்கும் போது மிகுந்த சங்கடத்திற்கு மட்டுமின்றி நண்பர்களின் கேலிக்கும் ஆளாகின்றனர்.

தனது பெற்றோர் 2009 முதல் இதுவரை 500 படங்களை முகநூலில் தங்களது 700 நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.இப்பொழுதும் தனது உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் , தன்னிடம் அனுமதியும் பெறாமல் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.தான் பலமுறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் தனது வாழ்க்கையை
கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று வழக்கில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க