• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் ஆயிரம் தெரு நாய்கள் கொலை

October 19, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தான் காரச்சி மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான காராச்சியில் 15,000 மேற்பட்ட பொதுமக்கள் தெரு நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள்.

நாய்களால் ஏற்படும் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. அதில் பொதுமக்களுக்குத் தொல்லை தரும் இரண்டாயிரம் நாய்களை விஷ ஊசி மூலம் கொல்ல வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களால் தெருவில் சுற்றிச் திரிந்து கொண்டிருந்த 1050 தெரு நாய்கள் கடந்த புதன்கிழமை விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டன. இதற்கு விலங்கின ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகார வரம்பு தலைமை ரேஹன் ஹஷ்மி கூறியதாவது,

கனத்த இதயத்துடன் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாய்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. அதைக் கட்டுப்படுத்த என்ன வழி என்று விலங்கின ஆய்வாளர்கள் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதைக் கட்டுப்படுத்த விரைவில் வழி வகுப்போம்.

மேலும் தற்போது நாய்கள் கொல்லப்பட்டது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள், குறிப்பாக விலங்குகளை நேசிப்போரும் ஆர்வலர்களும் தெருவில் சுற்றி திரியும் நாய்களைத் தத்து எடுத்துக் கொள்ள முன்வரவில்லை. அதற்குக் காரணம் அவரவர் வீட்டில் ஏற்கனவே நாய்கள் இருப்பது தான் என்றார் அவர்.

மேலும் படிக்க