September 19, 2025
தண்டோரா குழு
நீண்டநாள் நம்பிக்கை தடையில்லா வேகம் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் வாய்ந்த எஃப் 31 சீரிஸ் கோவை ரேஸ்கோர்ஸ் தாஜ் விவான்டா ஹோட்டலில் OPPO India நிறுவனம் தனது பிரபலமான F வரிசையில் புதிய F31 5G Series-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில், இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, F31 Pro+, F31 Pro மற்றும் F31 என்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது.வலுவான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் பேட்டரி, வெப்பம் குறைக்கும் திறன் மற்றும் வலுவான இணைய இணைப்பு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள், இந்திய சந்தையில் ரூ 35,000 க்குக் கீழ் கிடைக்கும் மிக உயர்தர சாதனங்களாகும்.
இந்தியாவின் அதிக வெப்ப சூழலை கருத்தில் கொண்டு, F31 5G Series முன்னோடியான தேமல் டிசைன் கொண்டது. Pro+ மாடலில் 5,219 mm² அளவுள்ள வேப்பர் சேம்பர், Pro மற்றும் F31 மாடல்களில் முறையாக 4,363 mm² மற்றும் 4,300 mm² சேம்பர்கள் உள்ளன. இதில் எக்ஸ்பான்டட் கிராஃபைட் அடுக்குகள் சேர்த்து, 43°C வரை வெப்ப சூழலிலும் ஸ்மார்ட்போன்கள் தடையில்லாமல் மென்மையாக செயல்பட உதவுகின்றன.
சாப்ட்வேர் மட்டத்தில் OPPO-வின் டூயல்-எஞ்சின் ஸ்மூத்னஸ் சிஸ்டம் (Trinity Engine மற்றும் Luminous Rendering Engine) மூலம், ஸ்மார்ட்போன் 72 மாதங்கள் (6 ஆண்டுகள்) வரை தொடர்ச்சியாக மென்மையாகவும் நம்பகமாகவும் செயல்படக்கூடியதாக உள்ளது.
மேம்பட்ட AI மற்றும் கேமரா வசதிகள்:50MP மெயின் கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் பல AI வசதிகள் (AI Eraser 2.0, AI Unblur, AI Reflection Remover) உள்ளன. 4K வீடியோ பதிவு செய்யும் திறனும் கொண்டது.மேலும் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் பயன்படுத்தும் வகையில் பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி 7,000mAh பேட்டரி, 80W SUPERVOOC ஃப்ளாஷ் சார்ஜ் மூலம் 30 நிமிடங்களில் 58% சார்ஜ், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதிகள். பேட்டரி ஆயுள் 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்.
விலை மற்றும் கிடைக்குமிடம்:F31 Series செப்டம்பர் 19, 2025 முதல் இந்திய முழு நாடு பரப்பு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் (OPPO இ-ஸ்டோர், ஃப்ளிப்கார்ட், அமேசான்) சேனல்களில் கிடைக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.