• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெங்காய விளைச்சல் அதிகரிப்பு, மக்களுக்கு இலவசமாகத் தரும் மத்திய பிரதேச அரசு

August 26, 2016 தண்டோரா குழு

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ரேசன் கடைகளில் இலவச அரிசி கொடுப்பதை போல மத்திய பிரதேச மாநில அரசு இலவச வெங்காயத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களுக்கு வெங்காயத்தை இலவசமாக வழங்க மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயம் அழுகிப் போவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த வருடம் மே மாதத்தில் அதிகளவிலான வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலை விவசாயிகள் மத்தியில் கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தியது. உலகின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக நாசிக் நகரம் திகழ்ந்து வரும் நிலையில், வெங்காயத்தைப் பயிரிடும் விவசாயிகள் அதற்குரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், நல்ல நிலையில் இருக்கும் வெங்காயம் சுமார் 600 முதல் 700 ரூபாய் வரை விலை போகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். வெங்காயம் ஈரத்துடன் இருந்ததால தான் வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வெங்காய வர்த்தகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தைக் கிலோ 6 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்தார். அதன்படி விவசாயிகளிடமிருந்து சுமார் 10.4 லட்சம் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

பருவமழை காலம் துவங்கிய நிலையில், உரியச் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால், வெங்காயங்கள் அழுகத் துவங்கின.

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்ய மாநில அரசு விற்க எண்ணியது. ஆனால், மிகக்குறைந்த விலை வெங்காயத்தை வாங்குபவர்கள் நிர்ணயம் செய்தனர்.

இந்நிலையில், வெங்காயத்தை இலவசமாக விநியோகம் செய்ய மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயத்தைக் கொண்டு செல்வதற்கான செலவுக்காக கிலோவுக்கு 1 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 3.28 லட்சம் கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க