December 11, 2017
தண்டோரா குழு
ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகளுக்கு எதிராக நன்னிலத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பேராசிரியர் ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஆழ்குழாய் எண்ணெய் கிணறு அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவரும்,பேராசிரியருமான ஜெயராமன் அங்கு வந்தார்.
அப்போது, அங்கு வந்த போலீசார் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 4 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ஏற்கனவே, ஓஎன்ஜசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, ஜெயராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.