• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த மிருகம் கைது

September 8, 2016 தண்டோரா குழு

ஹைதராபாத்தில் ஒரு வயதே ஆன பெண் குழந்தையை உறவினர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சில்கல்குடா பகுதியைச் சேர்ந்த, தெருவோரம் சோளம் வியாபாரம் செய்து வரும் தம்பதியினர், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதே குடியிருப்பின் தரைதளத்தில், இத்தம்பதியினரின் உறவினரான தீபு சிங் என்ற 20 வயது இளைஞன் வசித்து வந்துள்ளான்.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த தீபு சிங் தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளான்.பின்னர், வீட்டின் கழிவறையில் வைத்து அந்தக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.இதையடுத்து குழந்தை கதறி அழுததால் பெற்றோர் தீபுவின் அறைக்குச் சென்று அவனை பிடித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பியோடிய தீபுவை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அக்குழந்தை தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.தீபு சிங் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க