• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய தரைக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு

January 28, 2017 தண்டோரா குழு

மத்திய தரைக்கடலில் சிக்கித் தவித்த 1,000 அகதிகளை இத்தாலி நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இது குறித்து இத்தாலி கடலோரக் காவல் படையின் அதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி28) கூறுகையில், “மத்திய தரைக்கடலில் சிக்கித் தவித்த 1,000 வெளிநாட்டு அகதிகளைப் பத்திரமாக மீட்டுள்ளோம். ஆறு ரப்பர் படகுகள் மற்றும் மூன்று மரக்கப்பல்களில் பயணம் செய்த அந்த அகதிகளை இத்தாலிய கடலோர காவல் படை, ஸ்பெயின் நாட்டு மனிதாபிமான குழு மற்றும் கரிபியன் சுப்ளை கப்பல் ஆகியவற்றின் உதவியுடன் அகதிகள் மீட்டோம். ஒரு ரப்பர் படகில் இறந்த பயணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை” என்றார்.

ஐரோப்பாவில் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் குடியேறுகின்றனர். லிபியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு நிலையற்ற வட ஆப்பிரிக்க மாநிலங்களைச் சேர்ந்த ஆள் கடத்தல்காரர்கள் மூலம் செல்கின்றனர்.

கடந்த ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மட்டும் 1 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இத்தாலி நாட்டிற்கு அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க