• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்த 100 வயது மூதாட்டி

July 23, 2016 தண்டோரா குழு

ஜப்பானில் தனது 100வது வயதில் பின்புற நீச்சல் போட்டியில் மிய்க்கோ நகோக்கா என்ற மூதாட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் நாட்டிலுள்ள மட்சுயாமா என்ற நகரில் மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் பெண்கள் பிரிவுக்கான பின்புற நீச்சல் போட்டியில் 100 வயது மூதாட்டி மிய்க்கோ நகோக்கா கலந்து கொண்டார். அவர், 1500 மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 15 நிமிடம் 54 விநாடிகளில் பின் புறமாக நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

1914 ஆம் ஆண்டு பிறந்த இவர் நீச்சல் தெரியாமல் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில், அவரது முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 82 வயதில் நீச்சல் பயிற்சியைக் கற்றுக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2002ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் முறையாகக் கலந்துகொண்டார். அங்கு 50 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

மேலும், 2004ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற 50 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பின்புற நீச்சல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்து வந்தார். தொடர்ந்து, அவரது 90வது வயதில் ஜப்பான் நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனை என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.

அவர், 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பின்புற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது, ஜப்பானில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் பெண்கள் ப்ரி ஸ்டைல் பிரிவுக்கான 1500 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளார்.

சாதனைகளுக்கு முதுமை தடையல்ல என்பதையும் மன வலிமையும் பயிற்சியும் இருந்தால் எந்த வயதிலும் சாதனை படைக்கலாம் என்பதையும் மூதாட்டி மிய்க்கோ நகோக்கா நிரூபித்துள்ளார்.

மேலும் படிக்க