November 15, 2017
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இன்று(நவ 15) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற 1200 படுக்கை வசதிகள் உள்ளன.தற்போது பனியில் 300 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.நோயாளிகளை கவனிக்க போதிய எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லாததால் பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
இதனையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள், டீன் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் டீன் அசோகன் பேச்சு வார்த்தை நடத்தினார்.கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பதாக அவர் உறுதி கூறியதை தொடர்ந்து செவிலியர்கள் கலைந்து பணிக்கு சென்றனர்.இந்த போராட்டத்தால் மருத்துவப் பணிகள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.