• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நெருங்குகிறது

October 14, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை சராசரியாக, 464மி.மீ., பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது அங்காங்கே மழை பெய்ய தொடங்கிவிட்டது. இந்த மாதமே வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் ,பருவ மழையின் போது மற்ற மாநிலங்களை விட, 20 சதவீதம் கூடுதலாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது,

தமிழகத்தில் வரும், 20 ம் தேதி முதல் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஏரிகள், குளங்களை ஆகியவற்றை தூர்வாரி பரமாரித்து, நிலத்தடி நீரை சேமிக்கலாம். விவசாயிகள் பண்ணை குட்டைகள் போன்றவை உருவாக்கி வரப்பு வெட்டி பயிர் விளைச்சலை பெருக்குவதோடு, மண்வளத்தையும் பாதுகாக்கலாம் என கூறினார். மேலும் இந்த ஆண்டு சராசரியாக 464மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை விட, 19 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ பெய்யவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் பெய்த சராசரி மழையளவு

2011-ம் ஆண்டு 1100 மி.மீ., 2012-ம் ஆண்டு 371 மி.மீ., 2013-ம் ஆண்டு 535 மி.மீ, 2014-ம் ஆண்டு 733 மி.மீ ,2015-ம் ஆண்டு 690 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க