• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செப்.16ல் தமிழகத்தில் பால் பெட்ரோல் கிடைக்காது !

September 14, 2016 தண்டோரா குழு

செப்16ம் தேதி நடக்கும் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றதின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகவில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், கர்நாடகவில் வாழும் தமிழர்களை தாக்கியதுடன் அவர்களது கடைகள், வாகனங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை கண்டித்து தமிழகத்தில் செப்16ம் தேதி பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள், அமைப்புகள், வணிகர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் செப் 16ம் தேதி தமிழகத்தில் உள்ள பங்குகள் இயங்காது என தமழ்நாடு பெட்ரோல் விநியோகிஸ்தர்கள் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார். அதன்படி செப் 16ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 4600 பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.

அதேபோல், செப்.16ம் தேதி கடையடைப்பு போராட்டத்திற்கு பால் விநியோகஸ்தர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்று தமிழகத்தில் பால் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க