• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்குன்குனியா தாக்கி உயிர் இழப்பது சாத்தியமில்லை : சத்யேந்தர் ஜைன்

September 15, 2016 தண்டோரா குழு

சிக்குன் குனியா தாக்கி உயிர் இழப்பது சாத்தியமில்லை, ஆகையால் பதட்டம் வேண்டாம் என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜைன் தெரிவித்துள்ளார்.

சிக்குன் குனியா தாக்கி தலைநகரில் 10 பேர் இறந்துவிட்டதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்ததை ஒட்டி அமைச்சர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பெருகும் கொசுக்களை ஒழிக்க பி.ஜே.பி யின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு,கிழக்கு,தெற்கு நகராட்சி மையங்கள் எடுக்கும் முயற்சிகள் திருப்திகரமாக இல்லை என்று AAP அரசு கருதுகிறது.இதுவரை அவர்களது முயற்சிகள் பற்றி எந்த செய்தியும் அரசை எட்டவில்லை.எனினும் அரசு எடுக்கும் முயற்சியால் இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இத்தகைய நோயாளிகள் சிகிச்சை பெறும் வண்ணம் 12 பெரிய மருத்துவ மனைகளில் அதிக அளவில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மருத்துவர்களின் விடுமுறைநாட்களும் குறைக்கப்பட்டுள்ளது என்றும்
தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பதின் மூலம் இந்நோய் பரவாமல் தடுக்கமுடியும். 50 லட்சம் வீடுகள் கொண்ட டெல்லியில் அனைத்து மக்களும் அவரவர் வீட்டில் தண்ணீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வதன் மூலம்
கொசுக்களை ஒழிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மேற்படி குறிப்பிட்ட இறந்த நோயாளிகள் வேறு பல நோய்களின் தொடர்பால் இறந்திருக்கவேண்டுமேயன்றி சிக்குன் குனியா தாக்கியதால் மட்டும் இறப்பது சாத்தியமன்று. மாதத்திற்கு 6000 பேர் டெல்லி மருத்துவ
மனைகளில் இறக்கின்றனர்.அவ்வாறு இருக்கும் போது இதைப் பெரிதுபடுத்தி பதட்டம் அடைவது தேவையற்றது.

அரசு மருத்துவமனைகள் நோயாளிகளைச் சிகிச்சை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அனைத்து இடங்களிலும் கொசுக்களை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மருத்துவர்கள் இலவச முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.ஆகையால் பி.ஜே.பியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது .மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க