February 19, 2026
தண்டோரா குழு
NIT திருச்சியின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப–மேலாண்மை விழா பிரக்யான் தனது 22வது பதிப்பை பிப்ரவரி 19 முதல் 22 வரை கோலாகலமாக நடத்துகிறது.
இவ்வாண்டு விழா “அனாக்ரோனியா” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.
ISO 9001 மற்றும் ISO 20121 சான்றிதழ்கள் பெற்றுள்ள பிரக்யான்,இந்தியாவின் மிகப்பெரிய மாணவர்கள் நடத்தும் தொழில்நுட்ப விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது.தொழில்நுட்பப் போட்டிகள், பட்டறைகள், விருந்தினர் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு புதுமை நிகழ்ச்சிகள் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன.
ஓபன்ஹவுஸ் – மாணவர்
கண்டுபிடிப்புகளின் மேடை
விழாவின் முக்கிய அம்சமான “ஓபன்ஹவுஸ்” இரண்டு நாட்கள் நடைபெற்று, மாணவர்களின் புதுமைத் திட்டங்கள் ஆசிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
₹3 லட்சம் பரிசுத் தொகை
தேசிய அளவிலான ‘இன்ஜனீயம்’ தொழில்நுட்பப் போட்டி மற்றும் ‘சங்கம்’ வன்பொருள் ஹேக்கத்தான் ஆகியவை மொத்தம் ₹3,00,000 மதிப்புள்ள பரிசுகளை வழங்குகின்றன. இந்திய கடற்படை மற்றும் முன்னணி நிறுவனங்கள் வழங்கிய பிரச்சனை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்தப் போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,600-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுப் பதிப்பில் அன்பரசன் தங்கவேலு,ரவி பாலகிருஷ்ணா,தீபிகா பரத்வாஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். ‘கிராஸ்ஃபயர்’ முக்கிய விவாதத்தில் ஹரிஷ் மகாதேவன்,ஐஸ்வர்யா மணிவாணன், ரஷ்மி சமந்த், ராகுல் ஈஸ்வர், அபூர்வ் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொழில்துறை இணைப்பு
பிரக்யான் லினக்ஸ்,சாம்சங், மெர்சிடிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பட்டறைகள் நடத்தி, மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவம் வழங்குகிறது.
‘டெக்கிட்ஸ்’, ‘பேக் ஆஃப் டிலைட்’ போன்ற சமூகநல முயற்சிகள் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், ‘பிரக்யான் வலைப்பதிவு பாட்காஸ்ட்’ உலகளாவிய அளவில் விழாவின் செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
பி.யூனிக், அகில் நாயர், ப்ளூட் பாக்ஸர்ஸ் மற்றும் லேசர் மேன் ஷோ போன்ற கலைஞர்களின் இன்ஃபோடெயின்மெண்ட் நிகழ்ச்சிகள் இளைஞர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்துகின்றன.
தொழில்நுட்பமும் கலாச்சாரமும் இணையும் மேடையாக ‘பிரக்யான் 2026’ ஏற்படுத்தியுள்ளது.