• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் சின்னமலை-விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

September 21, 2016 தண்டோரா குழு

சென்னை சின்னமலை-விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, 2வது வழித்தடத்தில் சின்னமலை – விமான நிலையம் இடையே மேம்பாலப் பணிகளும், முதல் வழித்தடத்தில் ஷெனாய் நகர் – கோயம்பேடு இடையே சுரங்கப் பாதை பணிகளும் விரைவுபடுத்தப்பட்டன. இதில், சின்னமலை – விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது.கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து சின்னமலை – மீனம்பாக்கம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. மேலும் சின்னமலை மற்றும் விமானநிலையம் இடையிலான 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில், நங்கநல்லூர் சாலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை சுரங்க ரயில் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க