August 15, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் பைக்காரா உள்ளிட்ட 6 அணைகளும் திறக்கப்பட்டுள்ளன.
அவலாஞ்சி,அப்பர் பவானி அணைகள் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையில், நேற்று இரவு முதலே நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(ஆக.16) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.