• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.நா.வில் சுஷ்மா ஸ்வராஜ் ஆற்றிய உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

September 27, 2016 தண்டோரா குழு

ஐ.நா பொது சபையில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று உரையாற்றிய சுஷ்மா தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைப்படத்தில் இடமில்லை என்றும் சுஷ்மா பேசினார்.

மேலும் பாகிஸ்தானிடம் இந்தியா நட்பாக இருக்க விரும்புகிறது என்று கூறிய அவர், அதற்கு பரிசாக உரி மற்றும் பதான்கோட்டு தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தி வருவதாக வேதனை தெரிவித்தார்.

காஷ்மீரை அபகரிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு காஷ்மீர் கிடைக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கனவு காண வேண்டாம் என்றும் சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

இவரது பேச்சிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், சரியான நேரத்தில்,காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட இந்தியா சந்தித்துவரும் பல்வேறு சவால்களில் இந்தியாவின் குரலை ஐ.நா.,வில் சுஷ்மா சுவராஜ் ஓங்கி ஒலித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க