• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்கில் துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்ட கொள்ளைக் கும்பல் தலைவன் நாதுராம்

January 8, 2018 தண்டோரா குழு

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் கொள்ளைக் கும்பல் தலைவன் நாதுராம், தனது பேஸ்புக் பக்கத்தில் கைத்துப்பாக்கியுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறான்.

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.அப்போது, நாதுராம் கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதில், பெரிய பாண்டியன் உயிரிழந்தார்.

இதையடுத்து நாதுராம் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தற்போது ராஜஸ்தான் போலீசாரும், தமிழக போலீசாரும், நாதுராமையும், அவனது கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நாதுராம் தனது முகநூல் பக்கத்தில்,கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளான். போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், நாதுராம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க