October 9, 2018
தண்டோரா குழு
நக்கீரன் கோபால் கைதை வரவேற்கிறேன் என்று அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.மேலும் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் சட்டப்பிரிவு 124 -ன் கீழ் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நக்கீரன் கோபால் கைதை வரவேற்கிறேன் என்றும்,எந்தவித ஆதாரமில்லாமல் தனி நபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.