October 9, 2018
தண்டோரா குழு
ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் சட்டப்பிரிவு 124 -ன் கீழ் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.