• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் சட்டமசோதா தாக்கல்

December 28, 2017 தண்டோரா குழு

நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இஸ்லாமியர்கள் முறைப்படி ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்லும் விவகாரத்தில் வெறும் சர்ச்சைகள் கிளம்பியது. இதையடுத்து, ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறும் முத்தலாக் முறையை தடுக்கும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்ட்டது.

இதனைத்தொடர்ந்து முஸ்லிம்களில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறுவதை குற்றமாக கருதி தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் தயாரித்தது. இந்த சட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது, இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், இச்சட்டத்தை நடப்பு குளிர்கால கூட்ட தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் முறையில் விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார்.

முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ், முஸ்லீம் லீக், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க