October 2, 2018
தண்டோரா குழு
கோவையில் கிடா விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க உறுப்பினர் நாகராஜ் என்பவரை,பா.ஜ.க இளைஞர் அணி நிர்வாகி குட்டி(எ)கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் உயிரிழந்தார்.
கோவை ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி வசூல் பணத்தில் கடந்த 30ம் தேதி பா.ஜ.க வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர்.இந்த விருந்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.அதில்,விருந்து முடித்து 35பேர் சென்ற நிலையில்,துடியலூரை சேர்ந்த பாஜக உறுப்பினர் நாகராஜ்,நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி குட்டி(எ) கந்தசாமி உட்பட 5 பேர் எழுவாய்கள் சாலை கணபதிக்காரர் தோட்டத்தில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது,விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கந்தசாமி மது பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயமடைந்தார்.இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக ஆலந்துறை காவல்துறையினர்,தலைமறைவாக உள்ள பா.ஜ.க மாவட்ட இளைஞரணி நிர்வாகி கந்தசாமியை தேடி வருகின்றனர்.