September 28, 2016
தண்டோரா குழு
கேரளாவில் உடல் உறுப்பு தானம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு “மிருத சஞ்சீவினி” என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்தது. “கேரள நெட்வொர்க் பார் ஆர்கன் சேரிங்” என்ற தனியார் அமைப்பின் உதவியுடன் கேரள அரசின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.இதை தொடர்ந்து உடல் உறுப்புதான விளம்பர தூதராக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் எழுதியுள்ளார். அதில், உடல் உறுப்பு தானம் உயிர் காக்கும் என்ற கோஷத்துடன் இத்திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பலரது உயிரை காக்க முடியும் என கூறியுள்ளார்.