August 10, 2018
தண்டோரா குழு
முகமது அலி ஜின்னா – நேரு விவகாரத்தில் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக திபெத்திய தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
திபெத்திய தலைவர் தலாய்லாமா கடந்த சில நாட்களுக்கு முன்,கோவா மாநில தலைநகர் பனாஜியில் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர்,சுதந்திரத்திற்கு பின் முகமது அலி ஜின்னா பிரதமராக பதவியேற்க வேண்டும் என மஹாத்மா காந்தி விரும்பினார்.இதனை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை.இதற்கு நேருவிடமிருந்த சிறிய சுயநலம் காரணமாக இருக்கலாம்.
மஹாத்மா காந்தி விருப்பம் ஏற்கப்பட்டிருந்தால்,இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்திருக்கும். நேருவை எனக்கு நன்றாக தெரியும்.நல்ல அனுபவசாலி.ஆனால் சில நேரம் தவறு நடக்கும் எனக்கூறியிருந்தார்.தலாய்லாமாவின் இந்த கருத்து நாடும் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில்,இவ்விவகாரம் தொடர்பாக தான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எனது கருத்து சர்ச்சையை உருவாக்கிவிட்டது.நான் கூறியதில் தவறு இருக்குமானால்,மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.