• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.500 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது- மோடியின் முழு உரை

November 8, 2016 தண்டோரா குழு

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (8.11.16) தில்லியில்நாட்டுமக்களுக்காகஉரையாற்றினார். அப்போதுஅவர் பேசும்போது,

நாட்டில் கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க திடீர் முடிவை எடுத்துள்ளது, அதன்படி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், ஆகவே இன்று(8.11.16) அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன்அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் கூறினார்.

இதில் முக்கியமாக மக்கள் தங்களிடமுள்ள 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதைபோல், 500,1000 ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் கொடுத்து அதற்கு பதிலாக புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்,மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு நான் வருந்துகிறேன் எனவும் ஊழலுக்கு எதிரான இந்த போரில் மத்திய அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.

மேலும் படிக்க