• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் எடுத்த தவறான முடிவுகளின் விளைவுகளை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்

November 18, 2016 தண்டோரா குழு

பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்காமல் ரூபாய் நோட்டு வாபஸ் என்பது பிரதமர் மோடி எடுத்த தவறான முடிவு, பிரதமர் எடுத்த தவறான முடிவுகளின் விளைவுகளை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பழைய ரூ 500,1000 வாபஸ் முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் விமர்சித்து வருகின்றனர். மத்திய முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரமும் விமர்சித்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;

ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றது பிரதமர் மோடியின் தவறான முடிவு. பொருளாதார நிபுணர்களை ஆலோசிக்காமல், பொருளாதார நிலையை ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவு இது.
ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதால் மட்டும் கறுப்பு பணத்தை ஒழித்து விட முடியாது.இதன் பாதிப்புக்களில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதை பற்றி யோசிக்காமல், மக்களிடம் வெளிப்பட்டுள்ள உணர்வுகளை பார்த்து அரசு பயந்து போய் உள்ளது.

அதனால் இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு வழியே இல்லை. பிரதமர் எடுத்த தவறான முடிவுகளின் விளைவுகளை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

பிரதமரின் இந்த முடிவு பற்றி ரிசர்வ் பேங்க் அப் இந்தியா அதிகாரிகள் பிரதமரிடம் கேள்வி கேட்கவில்லையா,இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு தெரியாதா என எனக்கு தெரியவில்லை.

இந்த 86 சதவீதம் ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதன் மூலம் பொருளாதாரத்தின் சக்கரங்கள் முடக்கப்பட்டு, நசுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் ஆரம்ப நிலை தாக்கத்தை இந்த நாடு தற்போது பார்த்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் விளைவுகள் ஏற்பட போகிறது என்பது போக போகத்தான் தெரியும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க