• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் – தனியரசு, கருணாஸ், அன்சாரி கண்டனம்

January 12, 2018 தண்டோரா குழு

வைரமுத்து முத்து குறித்து இழிவாக பேசிய எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டாள் குறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து தவறான கருத்து தெரிவித்தாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கவிஞர் வைரமுத்துவை கடுமையாக சாடினார்.

இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோர் தனது கேவலமான கருத்துக்கு ஹெச்.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரி என்பதை மறந்து விட வேண்டாம்.

”கவிஞர் வைரமுத்துவை ஹெச்.ராஜா தரம் தாழ்ந்த சொற்களால் இழிவுப்படுத்தியுள்ளார்.சம்பந்தமே இல்லாமல், நபிகள் நாயகத்தையும், அவர்களின் மனைவியரையும் இழிவுப்படுத்தியும், பொது அமைதியும் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.” என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க