• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமராஜர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதல்

January 28, 2017 தண்டோரா குழு

எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் ஒன்றோடு ஒன்று லேசாக மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.

இச்சம்பவம் குறித்து காமராஜர் துறைமுக அதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி 28) கூறுகையில், “எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் ஒன்றோடு ஒன்று லேசாக மோதிக்கொண்டன. எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் துறைமுகத்திற்குள் வந்தது. அதே சமயம் காலியாக இருந்த மற்றொரு கப்பல் துறைமுகத்திலிருந்து வெளியே சென்ற போது, இரண்டு கப்பலும் லேசாக மோதிக்கொண்டன. இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை நடந்தது. இதில் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ இல்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டுளோம்” என்றார்.

காமராஜர் துறைமுகம லிமிடெட் ஃபேஸ்புக் பதிவில், “டீசல் ஏற்றி வந்த “டான் காஞ்சிபுரம்” என்ற இந்திய கப்பலும் பி.டபிள்யூ. மேப்பில் என்ற இங்கிலாந்து கப்பலும் துறைமுகத்திற்கு வெளியே லேசாக மோதிக்கொண்டன.

இங்கிலாந்து கப்பல் குழாய் மூலம் வாயு ஏற்றி வந்தது. இருந்தாலும் இந்த விபத்தில் நல்லகாலமாக எண்ணெய் மாசு ஏற்படவில்லை. யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. துறைமுக அதிகாரிகள் இரண்டு கப்பலையும் கண்காணித்து வருகின்றனர். மற்ற கப்பல்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன” என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க