• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“அதிபர் தேர்தலில் மிச்சேல் ஒபாமா போட்டயிடமாட்டார்

December 1, 2016 தண்டோரா குழு

தேர்தலில் மிச்செல் ஒபாமா ஒருபோதும் போட்டியிடமாட்டார் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் போட்டியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, “ரோல்லிங் ஸ்டோன்” என்னும் அமெரிக்க பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், ”மிச்சேல் ஒருபோதும் அமெரிக்க அதிபர் போட்டியில் போட்டியிடமாட்டார்” என்று ஒபாமா கூறினார்.

மிச்சேல் மிகவும் திறமையானவர். அமெரிக்க மக்கள் மேல் அன்பும், மரியாதையும் கொண்டவர். அவர் அரசியலில் இருக்க மிகவும் விவேகமானவர் என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை மிச்சேல் ஆதரித்துப் பிரசாரம் செய்தார். அதில்,, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பின் மனப்பான்மையும் பெண்களை நடத்தும் விதத்தையும் கண்டித்து பேசியது அனைவரையும் கவர்ந்தது.

வெள்ளை மாளிகையில் வசிக்கும் முதல் ஆப்பிரிக்க இனப் பெண் இவரே ஆவார். வரும் ஜனவரி மாதம் 2௦-ம் தேதி வெள்ளை மாளிகையை விட்டு செல்லும் இவர் அமெரிக்காவின் பிரபல சட்ட கல்லூரியான ஹார்வர்டில் படித்த வக்கீல் ஆவர். மிச்சேல் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவரான பாரக் ஒபாமாவை விட பிரபலமானவர். வெள்ளை மாளிகை விட்டு செல்லும் போது மிச்சேலுக்கு வயது 53.

ஒரு முறை அவரது எதிர்காலத் திட்டம் பற்றி கேட்டபோது, நான் “ஒரு போதும் ஹிலாரியின் பாதையில் செல்ல மாட்டேன்” என்று கூறினார். மேலும், அதிபர் பதவியில் இருந்த பில் கிளிண்டனின் அடிச்சுவடிகளைப் பின்பற்றினார் ஹிலாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒபாமா கூறினார்.

மேலும் படிக்க