October 12, 2018 
தண்டோரா குழு
                                பெண்களை சுயமரியாதையுடனும்,கவுரவத்துடனும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி #Metoo இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் #Metoo என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeToo  இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,#MeToo ஹாஸ்டேக்கிற்கு பல்வேறு திரைபிரலங்ககள்,அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதில் பாஜகவைச் சேர்ந்த எம்.ஜே அக்பர் என்னும் அமைச்சர் ஒருவர் சிக்கியுள்ளார்.மேலும்,தன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு இன்று வரை அவர் பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,”பெண்களை சுயமரியாதையுடனும், கவுரவத்துடனும் நடத்த வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.தங்களுக்கு நடந்த துயரத்தை தைரியத்துடன் வெளியே கூறுபவர்களை பாராட்டுகிறேன்.உண்மையை உரக்க சொல்லப்படவேண்டும்.இது மாற்றத்தை கொண்டு வரவேண்டும்”  எனக் கூறியுள்ளார்.